ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா பவுண்டரி டிவிஷனில் சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புதனன்று (ஜூன்5) நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு 3 ஆவது நாளாக அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏஐசிசிடியு மாவட்ட பொதுச் செயலாளர் சிம்பு தேவன், சிபிஎம்எல் மாவட்டச் செயலாளர் சரோஜா, மாவட்டக் குழு உறுப்பினர் வாசுதேவன் ஆகியோர் பங்கேற்றனர்.