tamilnadu

வெல்டிங் தொழிலாளர் திறனை  மேம்படுத்த பயிற்சித்திட்டம்

 சென்னை, ஜன.21-  மத்திய அரசின் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் பேரில் செயல்பட்டு வரும் இந்திய வெல்டிங் நிறுவனம் (ஐஐறு), தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தனியார் தொழில்துறையினருடன் இணைந்து நாட்டில் உள்ள திறன்மிகு வெல்டிங் தொழிலாளர்களிடையே தேங்கியுள்ள இடைவெளியை குறைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து ஐ.ஐ.டபிள்யூ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், தேசிய அமைப்புக் குழுவின் இணைத் தலைவரு மான ஆர். சீனிவாசன் கூறுகையில், இன்றைய  சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவன துறையில் நிலவும் திறன் மற்றும் தொழில்நுட்ப குறைபாடுகள் மிகவும் வெளிப்படையாக உள்ளது. இந்தியாவின் முன்னணி வெல்டிங் பயிற்சி நிறுவனமான இந்திய வெல்டிங் நிறுவனம், உலோக உருக்கு மற்றும் வெல்டிங் தொழில்நுட்பத்தை மேம்படுத்து வதற்காக ஒரு கட்டமைக்கப்பட்ட வழியில் சான்றிதழ் பயிற்சிகளை வழங்கவுள்ளது என்றார். மும்பையில் வரும் பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவுள்ள 2020ம் ஆண்டிற்கான 13 வது வெல்ட் இந்தியா கண்காட்சியில்,  "மேம்பட்ட வெல்டிங் தொழில்நுட்பம் மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கான தர அமைப்புகள்” என்ற கருப்பொருளில் இதற்கான முன்முயற்சியை காணலாம் என்றும் அவர்கூறினார்.

;