தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'பாரதம்' என்று குறிப்பிட்டு ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கான அழைப்பிதழில் இந்திய ஜனாதிபதி என்பதற்கு பதிலாக "பாரத ஜனாதிபதி" எனக் குறிப்பிடப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, 'பாரதம்' என்று குறிப்பிட்டு ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
'தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நம் நாட்டின் இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து, வலிமை மற்றும் திறமையான பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியைத் தெரிவிப்போம்' எனக் குறிப்பிட்டுள்ளார்.