சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியை பாதுகாக்க போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறை கைது செய்துள்ளது.
சென்னை வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குள் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சிங்காரம் பிள்ளை அரசு உதவி பெறும் பள்ளியின் இடத்தை சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். மேலும் பள்ளி கட்டிடங்களை இடித்து வணிக வளாகம், காய்கறி கடை, ஹோட்டல் ஆகியவற்றை அரசின் அனுமதி பெறாமல் கட்டியுள்ளனர்.
இந்நிலையில், அரசு விதிமுறைகளுக்கு மாறாக அரசு உதவி பெறும் பள்ளியை விற்பனை செய்ததை கண்டித்தும், பள்ளியை விற்பதற்கு காரணமாக இருந்த நிர்வாக குழுவை கலைத்து, அப்பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும். என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் இன்று துண்டு பிரசுரம் (நோட்டீஸ்) விநியோக பிரச்சாரப் போராட்டத்தை சிபிஎம் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாநிலசெயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் துவக்கிவைத்து கிளம்பிய உடன் காவல்துறை அனுமதி மறுத்து மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் ஜி.செல்வா உட்பட அனைவரையும் கைது செய்தது.