tamilnadu

திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி முக்கிய செய்திகள்

பள்ளி மாடியிலிருந்து குதித்து மாணவி தற்கொலை முயற்சி

திருவண்ணாமலை, பிப். 14- திருவண்ணாமலை -   திண்டிவனம் சாலையில்  தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது.  இந்த  பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி  வியாழனன்று தன்னுடைய புத்தகப் பையில் பரிசுப்பொருள் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. அதை கவனித்த வகுப்பு ஆசிரியர், பரிசுப்பொருட் களை பள்ளிக்கு கொண்டு வந்தது தவறு என்று  கண்  டித்துள்ளார்.  மேலும், மாணவி மறுதினம் பள்ளிக்கு  வரும்பொழுது, பெற்றோரை உடன் அழைத்து வர வேண்டும் எனவும் எச்சரித்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் வகுப்பறையிலிருந்து ஆசிரியர் வெளியில் சென்றதும், மாலை பள்ளி முடியும் தருவா யில், வகுப்பில் இருந்து வெளியே சென்ற மாணவி,  முதல் மாடியில் இருந்து திடீரென கீழே குதித்துள் ளார். மாணவியின் அலறல் சத்தம் கேட்டு, ஆசிரியர்க ளும், மாணவர்களும் ஓடிச்சென்று பார்த்தனர்.  கை,  கால்களில் படுகாயம் அடந்த மாணவியை, சிகிச்சைக்  காக,  திருவண்ணாமலை அரசு மருத்துவமனை யில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி யுள்ளனர். இச்சம்பவம் பள்ளி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதி பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: காப்பாளர் மீது நடவடிக்கை எடுத்திடுக

மாதர் சங்கம் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி, பிப். 14- அரசு மாணவியர் விடுதி போதக காப்பாளி யாக பணிபுரியும் பெண் ஊழியருக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வரும் அரசு விடுதி வார்டன் மீது துறை ரீதியாக வும், சட்ட ரீதியாகவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் தமிழக அரசையும், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தையும் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் ஊழியரை அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கள்ளக்  குறிச்சி மாவட்டத்தலைவர் ஆ.தேவி செய லாளர் ஏ.அலமேலு, துணைத் தலைவர் ஆ.சக்தி ஆகியோர் நேரில் சந்தித்து நடந்த சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர் சங்கத்தின் சார்பில் வெளி யிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கடந்த 2 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து  சம்பந்தப்பட்ட பெண் ஊழியர் தனக்கு பாலி யல் ரீதியாகவும், தன்மீது பொய் புகார்கள் அளித்து தொல்லை கொடுத்து வரும் அர கண்டநல்லூர், உளுந்தூர்பேட்டை மாண வர் விடுதிகளில் வார்டனாக பணிபுரியும் எம். முருகேசன் மீது தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர், முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாநில  அளவில் துறையின் ஆணையர், காவல் துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுக்கு புகார்  அளித்தும், அந்த புகாரின் மீது உரிய விசார ணையோ, நடவடிக்கையோ எடுக்கவில்லை என்பது ஆவணங்களின் மூலம் தெரிய வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்க ளும், சமூக குற்றங்களும் பெருகிவரும் நிலை யில் அரசு ஊழியராக பணிபுரியும் பெண் ணுக்குக்கூட பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இது மிகுந்த கவலைக்கும், கண்டனத்துக்  கும் உரியது. எனவே பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து .வன்கொடுமை செய்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ள அரசு மாணவர் விடுதி காப்பாளராக பணிபுரி யும் எம்.முருகேசன் மீது துறை ரீதியான, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின்  கள்ளக்குறிச்சி மாவட்டக்குழு சார்பில் தமிழக  அரசையும் மாவட்ட நிர்வாகத்தையும் வலி யுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;