tamilnadu

img

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் திருவள்ளுவருக்கு காவி உடை! மீண்டும் சர்ச்சை

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றவர் திருவள்ளுவர் பிறப்பால் எல்லாருமே சமமே என்றார். ஆனால் மனுதர்மமோ பிறப்பால் ஏற்றத்தாழ்வு உண்டு என கூறியது. அந்த மனுதர்ம சித்தாந்தத்தை கடைபிடிக்கும் சங்பரிவாரத்தினர் திருவள்ளுவரை தங்களின் அரசியலுக்கு பயன்படுத்தி கொள்ள திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து அடிக்கடி சர்ச்சையை ஏற்படுத்துவது வழக்கம்.

அந்த வகையில். பாஜகவின் அடிவருடியாக செயல்படும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் திருவள்ளுவர் திருநாள் 24-05-2024 அன்று நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்த நிலையில், ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் வெளியிடப்பட்டுள்ள அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையுடன் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சியினர் கண்டனம் எழுப்பி வருகின்றன.

 

 

;