திருவண்ணாமலை, ஜூலை. 27- சமூக வெளியிலும், பொருளாதார அரங்கிலும் பின்தங்கிய ஆதிதிரா விடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ இனத்தை சார்ந்த மக்களை முன்னேற்றமடைய செய்ய வும், இப்பிரிவுகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவிகள், பெண்கல்வி, தீண்டாமை ஒழிப்பு, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார நிலையை மேம்படுத்து வது உள்ளிட்ட பணிகளை, ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செய்துவருகிறது. இதற்காக, திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் செங்கம், வந்தவாசி, போளூர் என, 3 இடங்களில் ஆதி திராவிடர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் அலுவலகங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட த்தில், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பாக 44 ஆரம்பப் பள்ளிகள், 12 நடுநிலைப்பள்ளிகள், 6 உயர்நிலைப்பள்ளிகள், ஒரு மேல்நிலைப்பள்ளி என, 63 பள்ளி களும் 51 விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. பழங்குடியினர் நலத் துறையின் சார்பாக 26 உண்டு உறைவிட ஆரம்ப பள்ளிகளும், 4 உயர்நிலைப் பள்ளியும், ஒரு மேல்நிலை பள்ளியும் என 31 பள்ளி களும், 2 பழங்குடியின மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளையும், விடுதிக ளையும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் தனி வட்டாட்சியர் அலுவலகம் நிர்வ கித்து வருகிறது. மேலும், திரு வண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும், ஆதிதிராவிடர், பழங்குடி யின மக்களின் அடிப்படை உரிமைக ளான, குடியிருக்க இடம், மயான வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகளையும் செய்துவருகிறது. இம் மாவட்டத்தில் செங்கம், வந்தவாசி, போளூர் ஆகிய 3 இடங்களில், தனி வட்டாட்சியர் அலுவலகம் அமைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. ஆனால், இன்று வரை அந்த அலுவலகங்க ளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மூன்று தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் தனியாக அலுவலக கட்டிடம் கிடையாது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கும் விடுதியையே, அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மாணவர்களுக்கு தங்குமிடம் வசதி குறைய வாய்ப்பு உள்ளது. அலுவலகத்திலிருந்து பணி யிடங்களுக்கு செல்ல வாகன வசதி இல்லை. தேவைப்படும்போது, இவர்கள் தனியாக வாடகை வாகனங்களை பயன்படுத்தி வரு கின்றனர். இந்த தனி வட்டாட்சியர் அலுவலகங்களில், தலைமை எழுத்தர், நில அளவையாளர், வருவாய் ஆய்வாளர், ஆவண எழுத்தர், தட்டச்சர், டிரைவர் என பல பணிடங்கள் காலியாகவே உள்ளது. அலுவகத்தில் பணியில் இருப்பவர் தனி வட்டாட்சியர் மட்டுமே. இது குறித்து, தலித் விடுதலை இயக்கத்தின் மாவட்டத் தலைவர் எம். அமுல்சாமி கூறுகையில், “தனி வட்டாட்சியர் அலுவலகங் களில் கடந்த 30 ஆண்டுகளாக இந்நிலை தொடர்வதால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளிகள், விடுதிகள், மற்றும் அந்த சமூகங்களைச் சேர்ந்த மக்களின் அடிப்படை பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படுவதில், காலதாமதம் ஏற்படுகிறது” என்றார். செங்கம், வந்தவாசி, போளூர் ஆகிய மூன்று தனி வட்டாட்சியர் அலுவலகங்களிலும், காலிப்பணி யிடங்களை நிரப்புவதோடு, தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு என தனி அலுவலகம், வாகன வசதி ஆகியவற்றை ஏற்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் செங்கம் வட்டச் செயலாளர் ஏ.லட்சுமணன் கூறியபோது, “செங்கம் வட்டத்தில் தாழ்த்தப்பட்ட, மலை வாழ், பழங்குடி இருளர் இன மக்கள் அதிகமாக வசித்து வருகின்றனர். செங்கம் தனி வட்டாட்சியர் அலுவலகம், செங்கம் பகுதியிலேயே தொடர்ந்து செயல்பட வேண்டும், சமீப காலமாக தனி வட்டாட்சியர், தனது அலுவல கத்திற்கு வருவதே இல்லை. எந்த நேரமும், அலுவலகம் பூட்டியே கிடக்கிறது. அலுவலகத்திற்கு வரும் மக்கள் காத்துக் கிடக்கின்றனர். இந்த நிலையை மாற்றி, தற்போது உள்ள இடத்தில், தினசரி அலுவலகம் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், அல்லது, வட்டாட்சியர் அலுவல கத்தில் உள்ள பழைய நீதிமன்ற கட்டிடத்தில் இடமாற்றம் செய்து அலுவலகத்தை செயல்படுத்தலாம் என்றார்”.