tamilnadu

img

தீக்கதிர் முக்கியச் செய்திகள்

நாடாளுமன்றம் விரைவில் கூட உள்ள நிலையில்ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

                                     ******************

மின்னணுவியல் துறையில் முதலீடு செய்ய விரும்பினால் 5 ஆண்டுகளுக்கு மின்சார வரி விலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

                                     ******************

மும்பையில் நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 71 நாட்களாக குறைந்து உள்ளது.

                                     ******************

மேற்குவங்கத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான கடத்தல் துணிகளுடன் சென்ற மீன்பிடி படகை இந்திய கடலோர காவல்படை பிடித்துள்ளது.

                                     ******************

வருகிற 12-ந்தேதி முதல் 40ரயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே முடிவுசெய்துள்ளது.

                                     ******************

உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மத்திய அரசின் தலைமைவழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

;