ஆர்.மோகன்-சாந்தி ஆகியோரது மகன் எம்.பிரகாஷ்-திவ்யதேஜா ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வியாழனன்று (மே 9) பல்லாவரத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு, பி.ஜீவா, ஆர்.கபாலி, எஸ்.பழநிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.