tamilnadu

img

திருமழிசை காய்கறி சந்தை செயல்பட தொடங்கியது

சென்னை, மே 11 - கொரோனா பாதிப்பு எதிரொலியாக சென்னை கோயம்பேட்டிலிருந்து மாற்றப்பட்ட தற்காலிக காய்கறிச் சந்தை திங்களன்று (மே 11) திருமழிசையில் செயல்பட தொடங்கியது. தமிழகத்தின் மிகப் பெரிய காய்கறிச் சந்தையான கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனையடுத்து சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டம்,  திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது.  

சுமார் 70 ஏக்கர் நிலப்பரப்பில் அமையப்பட்டுள்ள தற்காலிக சந்தை பயன்பாட்டிற்கு வந்துள்ளது, முதற்கட்டமாக 10க்கும் மேற்பட்ட லாரிகளில் காய்கறிகள்  வந்து இறங்கின. மே.10 அன்று நள்ளிரவு முதலே மொத்த வியபாரம் தொடங்கியது. சந்தை உள்ளே வருபவர்களுக்கு கொரானோ உள்ளதா என உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 12 முதல் காலை 7 மணி வரை மட்டுமே வியபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை காய்கறி சரக்குகள் கொண்டு வந்து இறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.