tamilnadu

img

தமிழ்நாட்டில் 60 வயதைக் கடந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதில் தயக்கம் காட்டுவதாக ஆய்வில் தகவல்

தமிழ்நாட்டில் 60 வயதைக் கடந்தவர்கள் கொரோனா தடுப்பூசி போடத் தயக்கம் காட்டுவதாக பொதுச் சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களிடம் பொதுச் சுகாதாரத்துறை சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், கிராமப் பகுதிகளில் வசிக்கும் 20.3 சதவீத பேரும், நகரப் பகுதிகளில் வசிக்கும் 17.5 சதவீத பேரும் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் தயக்கம் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், 60 வயதைக் கடந்
தவர்களில் 27.6 சதவீதம் பேரும், 45 முதல் 60 வயதுடையவர்கள் 18.2 சதவீதம் பேரும், 18 முதல் 44 வயதுடையவர்கள் 16.9 சதவீதம் பேரும் தடுப்பூசி போடத் தயங்கு
வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 60 வயதைக் கடந்தவர்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள அதிக தயக்கம் இருப்பது ஆய்வில் தெரியவந்ததையடுத்து, அவர்க
ளுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுச் சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பது தெரியவந்துள்ளது. 19.7 சதவீத ஆண்கள் மற்றும் 18.4 சதவீத பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், 80.3 சதவீத ஆண்களும், 81.6 சதவீத பெண்
களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வமாக இருப்பதும், 19.7 சதவீத ஆண்கள் மற்றும் 18.4 சதவீத பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் காட்டுவதாக
வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;