tamilnadu

img

கோவாக்சின் தடுப்பூசியின் காலாவதி வரம்பு 6 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிப்பு  

கோவாக்சின் தடுப்பூசியின் காலாவதி வரம்பை 6 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக நீட்டிக்க ஒன்றிய மருந்து தர நிர்ணய கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது.  

6 மாதங்களாக இருந்த இந்த காலாவதி வரம்பை 24 மாதங்களாக நீட்டிக்க வேண்டும் என கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பித்து அதற்கான நிலைத்தன்மை தரவுகளைத் தாக்கல் செய்திருந்தது.  தற்போது 2 முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் கோவாக்சின் இருப்பு வைத்து, 6 மாதம் வரை அதை பயன்படுத்தலாம். இதே வெப்பநிலையில் அதை 24 மாதங்கள் வரை வைத்து பயன்படுத்த முடியும் என பாரத் பயோடெக் அப்போது தெரிவித்தது.  

தரவுகளை பரிசோதித்த பின்னர் காலாவதி வரம்பு 12 மாதங்களாக அதிகரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெருமளவில் போடப்படும் தடுப்பூசியான கோவிஷீல்டின் காலாவதி வரம்பு 9 மாதங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

;