வேட்டைக்காரன் சங்கம் உதயம்
ராணிப்பேட்டை, மே 18 – தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் கிளை சோளிங்கர் வட்டம், பாணாவரத்தில் துவக்கப்பட்டது. ஞாயிறன்று (மே 18) கிளைத் தலைவர் எஸ். பலராமன் தலைமையில் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில தலைவர் பி.டில்லிபாபு பேசுகையில், வேட்டைக்காரன் மக்களை பழங்குடி பட்டிய லில் வேண்டும். ஏற்கெனவே இருந்த மக்க ளுக்கு கடந்த 25 ஆண்டுகள் மறுக்கப்பட்ட அனைத்து சலுகைகளும், உரிமைகளையும் வழங்க வேண்டும். வீடற்ற மக்களுக்கு வீடு, இலவச வீட்டுமனை பட்டாவை மாவட்ட நிர்வாகம் விரைந்து வழங்க வேண்டும். பெண்கள் சுய உதவி குழுக்களுக்கு முழு மானியத்துடன் கடன் உதவி வழங்க வேண்டும் என்றார். பெயர் பலகையை பி. டில்லிபாபு பெயர் திறந்து வைத்தார். அகில இந்திய ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய மேடையின் மத்திய குழு உறுப்பினர் ஏ.வி. சண்முகம், வேட்டைக்காரன் பழங்குடியின முன்னேற்ற சங்க மாநில செயலாளர் ஈ. கெங்காதுரை, சிபிஎம் மாவட்ட செயலாளர் பி. ரகுபதி, மாநிலக் குழு உறுப்பினர் ஜெ. மகாதேவன், மாவட்டச் செயலாளர் யு. வரதராஜன், தலைவர் எம். ஏழுமலை, வி.தொ.ச மாவட்ட குழு உறுப்பினர் வ. வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக கிளை பொருளாளர் கே. பார்த்திபன் நன்றி கூறினார்.