சென்னை, ஜூன் 26- தங்கம் விலை செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மட்டும் 304 ரூபாய் வரை அதிகரித்தது. இந்நிலையில் புதனன்று(ஜூன்26) சவரனுக்கு 336 ரூபாய் குறைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரன், 26 ஆயிரத்து 88 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் 42 ரூபாய் குறைந்து, மூவாயிரத்து 261 ரூபாயாக உள்ளது. அதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் 50 காசுகள் குறைந்து, 40 ரூபாய் 80 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 40 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது.