tamilnadu

img

நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் 70.90 சதவீதம் வாக்குப்பதிவு

சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 9மணி நிலவரப்படி 70.90 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக   தமிழக தேர்தல் ஆணையர் சத்தயபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.


17வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர 38 தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு மக்களவை தொகுதிக்கும், ஒரு சட்டசபை தொகுதிக்கும்,ஏப்ரல் 18 வியாழனன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. வாக்குப்பதிவு  நிலவரம் குறித்து தமிழக தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாஹூ கூறியதாவது, தமிழகம் முழுவதும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரை மற்றும் சில இடங்களை தவிர்த்து இரவு 9 மணி நிலவரப்படி சராசரியாக 70.90சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் அதிகபட்சம் நாமக்கல் தொகுதியில் 78 சதவீதமும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 57.5 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளது. தவிர 18 தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் 71.62 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.


தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம்

நாடாளுமன்றத் தொகுதி வாரியாக வாக்குப்பதிவு விபரம் வருமாறு:


நாடாளுமன்றத் தேர்தல்

திருவள்ளூர் 72.02

வட சென்னை 61.76

தென் சென்னை 57.43

மத்திய சென்னை 57.86

திருப்பெரும்புதூர் 60.61

காஞ்சிபுரம் 71..94

அரக்கோணம் 75.45

கிருஷ்ணகிரி 73.89

தர்மபுரி 75.92

திருவண்ணாமலை 71.27

ஆரணி 76.44

விழுப்புரம் 74.96

கள்ளக்குறிச்சி 76.36

சேலம் 74.94

நாமக்கல் 79.75

ஈரோடு 71.15

திருப்பூர் 64.56

நீலகிரி 70.79

கோவை 63.67

பொள்ளாச்சி 69.98

திண்டுக்கல் 71.13

கரூர் 78.96

திருச்சி 71.89

பெரம்பலூர் 76.55

கடலூர் 74.42

சிதம்பரம் 78.43

மயிலாடுதுறை 71.13

நாகை 77.28

தஞ்சாவூர் 70.68

சிவகங்கை 71.55

மதுரை 62.01

தேனி 75.28

விருதுநகர் 70.27

ராமநாதபுரம் 68.26

தூத்துக்குடி 69.41

தென்காசி 71.60

திருநெல்வேலி 68.09

கன்னியாகுமரி 69.62


புதுச்சேரியில் 81.2 சதவீதம் வாக்கு பதிவாகியுள்ளது.



தொகுதி வாரியாக பதிவான வாக்கு சதவீதம்


18 தொகுதி இடை தேர்தல்

பூந்தமல்லி 79.14

பெரம்பலூர் 61.6

திருப்போரூர் 81.05

சோளிங்கர் 79.63

குடியாத்தம் 81.79

ஆம்பூர் 76.35

ஓசூர் 71.29

பாப்பிரெட்டிபட்டி 83.31

அரூர் 86.96

நிலக்கோட்டை 85.50

திருவாரூர் 77.38

தஞ்சாவூர் 66.10

மானாமதுரை 76.03

ஆண்டிபட்டி 75.19

பெரியகுளம் 64.89

சாத்தூர் 60..87

பரமக்குடி 71.69

விளாத்திகுளம் 78.06

மொத்தம் 71.62 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



;