tamilnadu

img

மக்கள் கோரிக்கைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்

வேலூர், செப்.27- வேலூர் மாவட்ட மக்க ளின் அடிப்படை தேவை மற்றும் கேரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெரு விளக்குகள் எரிய வேண்டும், தெருக்களில் மழை நீர் வடிகால் அமைக்கக்  கோரி குடியாத்தம் தட்டப்பாறை ஊராட்சியில் மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச்  செயலாளர் எஸ்.தயாநிதி,  செயற்குழு உறுப்பினர் கே. சாமிநாதன், காத்தவராயன், சரவணன், கோட்டீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமான வர்கள் பங்கேற்றனர்.  வாழைப்பந்தல் பேருந்து  நிலையம் எதிரே ஆர்.குப்பு  தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை களை வலியுறுத்தி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ரகுபதி, ஏ.சம்பத், எஸ்.கிட்டு உள்ளிட்டோர் பேசினர். நூறு நாள் திட்டத்தில் சீரான வேலை வழங்க வேண்டும், குண்டும் குழியு மாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேர்ணாம்பட்டு தாலுகா மேல் செட்டிக் குப்பம் கிராமத்தில் ஊர்வல மாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சி.எம்.நடராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எம்.பி.ராமச்சந்திரன், தாலுகா செயலாளர் பி.குண சேகரன், சி.சரவணன் மற்றும்  பலர் பேசினர். அரக்கோணம் நகரில் பாதாள சாக்கடை திட்டத் தால் சேதமடைந்த சாலை களை சீரமைக்கக் கோரி பழனிப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஏபிஎம் சீனிவாசன் தலைமை தாங்கினார். தாலுகா செய லாளர் துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏக லைவன், நெமிலி பேரூராட்சி முன்னாள் உறுப்பினர் ஆர்.வெங்கடேசன் உட்பட பலர் பேசினர்.

;