மின்சாரம், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் நடவடிக்கை களை திரும்ப பெறக்கோரி தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் வியாழனன்று (பிப்.6) மின்வாரிய மத்திய சென்னை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மனிதசங்கிலி நடைபெற்றது. தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், மாநிலச் செயலாளர் எம்.தயாளன், மத்தியசென்னை கிளைத் தலைவர் சீனிவாசன், செயலாளர் கண்ணன், எல்பிஎப் செயலாளர் அல்லிமுத்து, தமிழ்நாடு மின்சாரத் தொழிலாளர் சம்மேளன இணைச் செயலாளர் தனசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.