tamilnadu

img

திமுக வேட்பாளர் வாக்கு சேகரித்தார்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் பெரம்பூர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் எம்.கே.பி நகரில் வீடுவீடா சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். சிபிஎம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கே.மகேந்திரன், கல்தூண்ரவி (விசிக) உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.


மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வடசென்னை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கலாநிதியை ஆதரித்து திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ப.சிதம்பரம் சிறப்புரையாற்றினார். சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு எம்எல்ஏ, தாயகம்கவி எம்எல்ஏ, சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

;