சென்னை,ஜூன் 6- தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்யும் வசதி இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டுள்ளது. 2019-20ஆம் ஆண்டுக்கான மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்காக தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் தனி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் பொறியியல் கல்லூரி
களில் மருத்துவ படிப்புகளுக்கான விண் ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 5 ஆயிரம் விண்ணப் பங்கள் வரை பதிவிறக்கம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் சென்னை கீழ்ப்பாக்கத்தில், உள்ள மருத்துவக் கல்வி இயக்குனரகத்தின் தேர்வுக் குழு அலுவலகம் முன்பு மருத்துவ படிப்புகள் தொடர்பான சந்தேகங்களை தீர்ப்பதற்கான உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.