tamilnadu

img

செந்தில் பாலாஜி வகித்த துறைகள் வேறு அமைச்சர்களுக்கு நியமிக்க பரிந்துரை!

அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, 17 மணிநேர சித்ரவதையால் உடல்நலக்குறைவுக்கு உள்ளான அமைச்சர் செந்தில் பாலாஜி, ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதற்கிடையில், மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை வேறு அமைச்சர்களுக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு மின்சாரத்துறையும், வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறையும் வழங்க தமிழ்நாடு ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
 

;