tamilnadu

img

இளநிலை உதவியாளர் தேர்வு தேதியை அறிவிக்க டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தல்

சென்னை, ஜூன் 10 - இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை விரைந்து நிர்வாகம் அறிவிக்க வேண்டுமென்று டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் சென்னை மாவட்ட 12வது ஆண்டுப் பேரவை திங்களன்று (ஜூன் 10) கிண்டியில் நடை பெற்றது. இந்தப்பேரவையில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் ஆயிரம் ஊழி யர்கள் உபரியாக உள்ளனர். இவர்களில் முதற்கட்டமாக 500 பேரை இளநிலை உதவி யாளர்களாக பணியமர்த்த ஆகஸ்ட் மாதம் தேர்வு நடை பெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பம் செய்து ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள், நிராகரிக்கப்பட்டவர்களின் பெயர், பதவி, கடை எண், மாவட்டம் போன்ற விவரங்களை வெளியிட வேண்டும். தேர்ச்சி முடிவு தேதியை அறிவித்து, வெளிப்படைத் தன்மை யோடு நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஏபிசி சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒருமுறை ஊழியர்கள் பணியிட மாறுதல் செய்ய வேண்டும், 15 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தர ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். டாஸ்மாக் ஊழியர்கள் விதி தொகுப்பு-2014ஐ திரும்ப பெற வேண்டும்; ஊழியர்கள் மீதான நடவடிக்கைகள் அனைத்தும் நிலையாணை சட்டப்படி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பேரவையில் வலியுறுத்த ப்பட்டது. மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் ஜி.சதீஸ் தலைமை தாங்கினார். கவுரவத் தலை வர் எஸ்.அப்பனு கொடி யேற்றினார். சிஐடியு தென்சென்னை மாவட்டத் தலைவர் இ.பொன்முடி பேரவை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட பொதுச் செயலாளர் மா.அ.சரவணன் வேலை அறிக்கையும், பொருளாளர் எஸ்.வடிவேலு வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். சம்மேளன துணை பொதுச்செயலாளர் கே.பி.ராமு, நிர்வாகிகள் கே.ராஜ்குமார், என்.ராமச்சந்திரன், எஸ்.போஸ் உள்ளிட்டோர் பேசினர். சம்மேளன பொதுச் செய லாளர் கே.திருச்செல்வன் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் தலைவராக இ.பொன்முடி, பொதுச்செய லாளராக மா.அ.சரவணன், பொருளாளராக  பாக்கிய ராஜ் ஆகியோர் தேர்ந்தெடு க்கப்பட்டனர்.

;