சென்னை, டிச. 11- பிரதமர் மோடி, சீன ஜனாதிபதி ஜி-ஜின்பிங் ஆகியோர் மாமல்லபுரத்தில் அக்டோபர் 11, 12ஆம் தேதிகளில் தலைவர்கள் இருவரும் சந்தித்து பேசினர். அதன் தொடர்ச்சியாக சீன அதிகாரிகள் தமிழகம் வந்தனர். இதையடுத்து தொழில்துறை முதன்மைச் செயலாளர் முருகானந்தம், நிதித்துறையிலுள்ள செலவீனப் பிரிவு செயலாளர் சித்திக், சிப்காட் மேலாண் இயக்குநர் குமரகுருபரன் உள்ளிட்ட 4 பேர் வரும் 15 ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட நகரங்களில் பயணம் செய்யவுள்ளனர்.