tamilnadu

img

தமிழக அமைச்சரவை நாளை மறுநாள் கூடுகிறது

சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ந்தேதி  நடைபெறுகிறது.கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகிற 31-ந்தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இந்த நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வரும் 14-ந்தேதி நடைபெறுகிறது.  தலைமை செயலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

;