tamilnadu

ஹைக்கூ

ஊர் காவல் தெய்வம்
திருடனுக்கு சிம்ம சொப்பனமாய்
கோத்ரெஜ் பூட்டு
    ••••
சாயப்பட்டறை தொழிலாளி
தினமும் கொண்டாடுகிறார்
ஹோலி பண்டிகை
    ••••    
திறந்து கிடக்கும் கோவில்
யாரையும் தொடவிடாமல் பூட்டியிருக்கு
அர்ச்சகர் மனசு
    ••••

நாகை ஆசைத்தம்பி