tamilnadu

img

மதவெறியை தூண்டும் "தினமணி" மீது நடவடிக்கை எடுத்திடுக முதல்வருக்கு மக்கள் ஒற்றுமை மேடை வலியுறுத்தல்

தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒருங்கிணைப்பாளர்கள் பேரா. அருணன் மற்றும் க. உதயகுமார் விடுத்துள்ள அறிக்கை:

டில்லி தப்லீக் ஜமாத் மாநாடு பற்றி "தினமணி" ஏடு எழுதியுள்ள தலையங்கம் கொரோ னா விவகாரத்தை மதப்பிரச்னையாக பார்க்க வேண்டும் என்று வகுப்புவாதம் பேசு வதாக உள்ளது. "இதை மதப்பிரச்னை ஆக்கக் கூடாது என்று கூறி அடக்கி வாசிக்க முயல்வது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் இழைக்கும் துரோகம்" என ஆரம்பிக்கும் அந்தத் தலையங்கம் "மதப்பிரச்னை ஆக்கக்கூடாது என்று அறிக்கை விடுகிறார்களே அவர்களது பொறுப்பற்றதனத்தை என்னவென்று சொல்ல?" என்று முடிகிறது. மதப் பகைமையை மூட்டிவிடும் அந்த ஏட்டின் இந்தப் போக்கை தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வன்மையாகக் கண்டிக்கிறது.

 தொற்று நோய்க்கு மதச்சாயம் பூசும் தனது விஷமத்தனத்திற்கு ஏதுவாக தப்லீக் தொண்டர்கள்தான் "இந்தியா முழுவதும்" அதைப் பரப்பியவர்கள் எனும் பொய்க் குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளது. குஜராத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள 80க்கு மேற்பட்டவர்களில் ஒருவர்கூட டில்லி மாநாட்டிற்குச் சென்று வந்தவர் அல்ல எனும் உண்மை இந்தக் குற்றச்சாட்டின் போலித்தன்மையை அம்பலப்படுத்துகிறது என்பதை மேடை சுட்டிக் காட்டுகிறது.  டில்லியில் 200க்கு பேருக்கு மேல் கூடக்கூடாது எனும் கட்டுப்பாடு போடப்பட்டிருந்த நிலையில் இந்த மாநாட்டை அந்த அமைப்பு கைவிட்டிருக்க வேண்டும் என்பது சரி தான். ஆனால் உத்தரவு போட்டவர்கள் ஏன் அதை அப்போதே தடுக்கவில்லை? மாநாடு நடப்பது தெரிந்திருந்தும் டில்லி காவல்துறை தடுக்காதது " மிகப் பெரிய தவறு" என்பதோடு முடித்துக் கொள்கிறது தினமணி. மத்திய அரசின் கையில் உள்ள அந்தக் காவல்துறை தடுக்காததற்குக் காரணம் மோடி அரசுக்கே மாநாடு நடந்த மார்ச் 13-15 தேதிகளில் எல்லாம் கொரோனா தடுப்பில் போதிய அக்கறை இல்லை என்பதுதான்.

 அதை கவனமாக மூடி மறைக்கிறது அந்த ஏடு.  அக்கறை இருந்திருந்தால் பிப்ரவரியிலேயே வெளிநாட்டு விமானங்களைத் தடை செய்திருக்கும், வெளிநாடுகளிலிருந்து வரும் இந்தியர்களை தனிமைப்படுத்தியிரு க்கும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்து மக்களுக்கு விழிப்புணர்வைக் கொண்டு வந்திருக்கும். பிரதமர் ஒருநாள் ஊரடங்கு நடத்தியதே மார்ச் 22ல்தான். மத்திய அரசின் அசமந்தப் போக்கே இந்தியா முழுக்க நோய் பரவியதற்கு மூல காரணம் என்பதை மறைக்க பழியைத் தூக்கி ஓர் அமைப்பின் மீதும், அது சார்ந்திரு க்கும் ஒரு மதத்தின் மீதும் போடும் இந்த அக்கிரமத்தை மேடை கடுமையாகக் கண்டி க்கிறது.  கொரோனா எனும் கொடிய நோய் உலகையே ஆட்டிப் படைக்கிறது. நாடு, இனம், மதம் எனும் எந்த பேதமுமின்றி அது பல நாடுகளில் புகுந்திருக்கிறது. அப்படி இந்தி யாவிலும் நுழைந்திருக்கிறது. அதை இந்தியர்கள் அனைவரும் உள்ளத்தால் ஒன்று பட்டும், உடலால் தனித்திருந்தும் முறியடிக்க வேண்டியுள்ளது.

அதனால்தான் தமிழக முதல்வரும் கொரோனாவை மதப் பிரச்னை ஆக்காதீர் என்று சமீபத்தில் கேட்டுக் கொண்டார். ஆனால் தினமணியோ முதல்வர் உள்ளிட்ட அப்படி வேண்டுகோள் விடுப்போரை எல்லாம் துரோகிகள் என்றும், பொறுப்பற்றவர்கள் என்றும் சாடுகிறது. இந்தத் தலையங்கத்தை பாஜகவின் மூத்த தலைவர்கள் சிலரும் உற்சாகமாக வரவேற்று, மறுவெளியீடு செய்து பதிவுகள் போட்டுள்ளார்கள்.  இதன் நோக்கம் தமிழகத்தின் மதநல்லிணக்க மரபைச் சீர்குலைத்து இங்கே மதவெறி யைத் தூண்டுவதுதான், இதை கலவர பூமியாக்குவதுதான். மக்கள் ஒற்றுமையைக் கெடுக்கும் வகையில் தலையங்கம் எழுதிய தினமணி மீதும், அதை ஆதரித்துள்ள பாஜக தலைவர்கள் மீதும் உரிய சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை மேடை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

;