tamilnadu

img

அனைத்து நீதிமன்ற பணிகளும் நிறுத்திவைப்பு


சென்னை, ஏப்.14-
உயர்நீதிமன்றம் உட்பட தமிழகத்தின் அனைத்து நீதிமன்றங்களின் பணிகளையும், வருகிற 30ஆம் தேதி வரை நிறுத்திவைத்து உயர்நீதிமன்ற பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
கொரானா தடுப்பு நடவடிக்கையாக, வருகிற 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவை தமிழக அரசு நீட்டித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், வரும் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் பணிகளை நிறுத்திவைப்பது எனவும், தற்போது என்ன நிலை உள்ளதோ அதே நிலை நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
முக்கிய வழக்குகளை மட்டும் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நீதிபதிகள் அவர்களது வீட்டிலிருந்து விசாரிப்பார்கள் எனவும், அனைத்து வழக்குகளையும் இணையம் மூலமாக தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு நீதிமன்ற வளாகங்களில் நுழையவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை மீறி மூன்றாம் தேதி வரை நீட்டித்து உள்ளதால் நீதிமன்ற பணிகளும் மே மாதம் 3 ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

;