tamilnadu

img

ஜூன் 21-ல் வளைய சூரிய கிரகணம்.....

சென்னை:
வானில் தோன்றும் அரிய நிகழ்வான வளைய சூரிய கிரகணம் ஜூன் 21 ஆம் தேதி நிகழ்கிறது. சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணாலோ அல்லது தொலைநோக்கி மூலம் நேரடியாகவோ பார்க்க வேண்டாம் என பொதுமக்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பாக பார்க்க தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.வளைய சூரிய கிரகணத்தின்போது சூரியன் ஒரு நெருப்புவளையம்போல் காட்சி அளிக்கும். ஜூன் 21-ம் தேதி நிகழும்வளைய சூரிய கிரகணம் இந்தியாவில் ராஜஸ்தான், ஹரியானா, உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் மட்டுமே முழுமையாக தெரியும். தமிழகத்தில் வளைய சூரிய கிரகணத்தின்போது சிறு பகுதியைப் பார்க்கலாம். சென்னையில் காலை 10.22 மணி முதல் 11.58 மணி வரை தெரியும் என்று தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் எஸ்.சவுந்தரராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.

;