tamilnadu

img

மாத இறுதிக்குள் கரும்பு நிலுவைத்தொகை

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முடிவு

திருவண்ணாமலை, ஜன. 10- திருவண்ணாமலை மாவட்டம் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு விவசாயிகளுக்கு நீண்ட காலமாக கரும்பு அரவை நிலுவைத் தொகையை வழங்காமல், காலம் தாழ்த்தி வருகிறது. போளூர் கரைப்பூண்டி தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து தரணி சர்க்கரை ஆலை நிர்வாகிகள், வட்டாட்சியர், விவசாய சங்க நிவாகிகள் அடங்கிய முத்தரப்பு போச்சு வார்த்தை வெள்ளியன்று (ஜன.10) போளூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சுப்பிரமணி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பொங்கல் பண்டிகைக்கு முன்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என விவசாயிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. பொங்கலுக்குப் பிறகு நிலுவைத் தொகையை வழங்கிய பிறகு ஆலையில் மீண்டும் அரைவை துவங்கப்படும் என்று நிவாகத் தரப்பில் கூறப்பட்டது. இந்தமாத இறுதிக்குள் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். இல்லையேல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று வட்டாட்சியர் அறிவித்தார். இதையடுத்து ஜனவரி மாத இறுதிக்குள் விவசாயிகளின் நிலுவைத் தொகையை வழங்கி விட்டு சர்க்கரை ஆலையை இயக்குவது என்று முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட்டது.

;