tamilnadu

img

தனிநபர் கழிவறை திட்ட முறைகேட்டை கண்டித்து போராட்டம்

சிதம்பரம், ஜூலை 16- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி ஒன்றியத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்  தில் தனிநபர் இல்ல கழிவறை கட்டியதில் ரூ.  1 கோடிக்கு மேல் ஊழல் செய்த வட்டார ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் மற்றும் ஊழலுக்கு உறுதுணையாக இருந்த  அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் மீது வழக்குப் பதிவுசெய்து நடவடிக்கை எடுக்க வலி யுறுத்தி காட்டுமன்னார்குடி ஒன்றிய அலுவ லகம் முன்பு அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கடலூர் மாவட்டச் செயலா ளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மாநிலச்  செயலாளர் சின்னதுரை, மாவட்ட துணைச்  செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் செல்லையா, வட்டச் செயலாளர் வெற்றி வீரன். சி.பி.எம் வட்டச் செயலாளர் இளங்கோ வன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொது மக்கள் வளர்ச்சி அலுவலர் சுகுமார், ராமச்சந்தி ரன் ஆகியோரை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி  கூறுகையில், புகார் குறித்து மாவட்ட ஆட்சியர்  பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. விரைவில் நடவ டிக்கை எடுக்கப்படும் என்றார்.