tamilnadu

img

300 மையங்களில் போராடிய ஆட்டோ தொழிலாளர்கள்.... சிஐடியு வாழ்த்து

சென்னை:
காவல்துறையின் அடக்குமுறைகளை மீறி 300 மையங்களில்ஆட்டோ தொழிலாளர்களின் போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது என்றும் போராட்டங் களில் பங்கேற்ற ஆட்டோ மற்றும்அனைத்து வாகன ஓட்டுநர்களுக் கும் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு),தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து சம்மேளனம்(சிஐடியு) வாழ்த்துக்களையும் தெரிவித் துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு )பொதுச்செயலாளர் எம்.சிவாஜி, தமிழ்நாடு சாலைப் போக்குவரத்து சம்மேளனம் (சிஐடியு) பொதுச்செயலாளர் எஸ்.மூர்த்தி ஆகியோர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு),தமிழ்நாடு சாலைப்போக்குவரத்து சம்மேளனம் (சிஐடியு) சார்பில் டீசல், பெட்ரோல், கேஸ்விலை உயர்வை கண்டித்தும், ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள அனைவருக்கும் ரூ.15 ஆயிரம் கொரோனா கால நிவாரணம் வழங்க வேண்டும். கொரோனா காலத்தில் பிடிக்கப்பட்ட வாகனங்கள் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். இஎம்ஐ க்கான வட்டியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். வாகன கடனுக்கான கால அவகாசம் நீடிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 23 அன்று அறிவிக்கப்பட்ட போராட்டம் தமிழகம் மற்றும்புதுச்சேரி முழுவதும் மிகுந்தஎழுச்சியோடு நடைபெற்றுள்ளது.

போராட்டத்தை ஒடுக்க தமிழகம் முழுவதும் காவல்துறையை அரசாங்கம் ஏவிவிட்டது. அடக்குமுறைகளை தவிடுபொடியாக்கி போராட்டம் சிறப்பாக நடைபெற் றுள்ளது.தமிழகம் முழுவதும், குமரி,நெல்லை,தென்காசி, தூத் துக்குடி, மதுரை மாநகர், மதுரைபுறநகர், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், திருச்சி , திருச்சி புறநகர்,கரூர், பெரம்பலூர், கள்ளக் குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ,வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்னகிரி, நாமக்கல், சேலம், கோவை, ஈரோடு, திருப்பூர், பாண்டிச்சேரி என அனைத்துமாவட்டங்களிலும், ஆட்டோ நிறுத்தங்கள், வேன் டாக்சி நிறுத்தங்கள், அரசு அலுவலகங் கள் என சுமார் 300 இடங்களில்,4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஆவேசத்தோடு, சமூகஇடைவெளியை கடைப்பிடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளன.

தமிழகம் முழுவதும் மற்றும்புதுச்சேரியில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றஆட்டோ மற்றும் அனைத்துவாகன ஓட்டுநர்களுக்கும் தமிழ் நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் (சிஐடியு) சார்பிலும், சாலைப்போக்குவரத்து சம்மேளனம் (சிஐடியு) சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

;