திருவண்ணாமலை, ஜூலை 24- பால் உற்பத்தியாளர்களி டம், பால் கொள்முதல் செய்யாததை கண்டித்தும், உரிய விலை வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் மேல்பள்ளிப்பட்டு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே பாலை தரையில் ஊற்றி கவன ஈர்ப்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் பால் உற்பத்தியில் சிறந்து விளங்குவதாக பால்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர், பால் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் 8ஆவது இடத்தில் இருக்கிறது. பால் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தியாளர்களின் நலன் களை பாதுகாக்கவும் அரசு அக்கறையுடன் செயல் படுகிறது. எனவேதான் திரு வண்ணாமலை மாவட்டத் திற்கு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் தனியாக ஏற்படுத்தப்பட்டது. பால் உற்பத்தியில் திரு வண்ணாமலை மாவட்டம் முன்னோடியாக இருக்கிறது. நாளொன்றுக்கு சுமார் 3 லட்சம் லிட்டர் பால் இந்த மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சரின் கருத் துக்கு மாறாக, கடந்த சில மாதங்களாக, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், முழு அளவு பாலை கொள் முதல் செய்யாமல் பாதி அளவு பாலை மட்டும் ஆவின் நிர்வாகம் கொள்முதல் செய்துவந்தது. அடுத்த சில தினங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பாலில் 3 லிட்டர் பாலை மட்டும் கொள்முதல் செய்தது. ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கத் தால் வறுமையில் வாடும் விவசாயிகள், பால் உற்பத்தி யாளர்களிடம் பால் கொள் முதல் செய்யப்படாததால் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் வெள்ளி யன்று (ஜூலை.24) 3 லிட்டர் அளவு பாலை கூட, உற்பத்தி யாளர் சங்கங்களிடம் கொள்முதல் செய்யாமல் புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு தெரிவித்து கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள், திரு வண்ணாமலை வேலூர் சாலையில் உள்ள மாவட்ட கூட்டறவு பால் உற்பத்தியா ளர் ஒன்றிய அலுவலகத் திற்கு பால் கேன்களுடன் வந்தனர். பின்னர் பாலை தரையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.