tamilnadu

img

விளையாட்டுப் பல்கலை. பட்டமளிப்பு விழா

 சென்னை, அக்.4- சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு  உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக த்தின் 14வது பட்டமளிப்பு விழா அக்டோபர் 4அன்று நடைபெற்றது. இதில் 3638 பேர் பட்டம் பெற்றனர். இந்நிகழ்ச்சியில், பல்கலைக்கழக வேந்தரும்,தமிழ்நாடு ஆளுநருமான ஆர்.என்.ரவியும் . பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினும் பங்கேற்றுள்ளனர். இருவரும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். முதன்முறையாக பொதுவெளியில் ஒரே மேடையில் ஆளுநர்,துணை முதலமைச்சர் பங்கேற்றனர்.