tamilnadu

img

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சரான

சென்னை,ஆக.6- தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் எஸ்.என்.ஜே மதுபான ஆலைக்கு தொடர்புடைய 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் செவ்வாயன்று சோதனை மேற்கொண்டனர்.  தமிழகத்தைச் சேர்ந்த என். ஜெயமுருகன் என்பவருக்கு சொந்தமான  மதுபான தயாரிப்பு நிறுவனமான எஸ்.என்.ஜே டிஸ்டில்லரீஸ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. இந்த நிறுவனம் 2009-ஆம் ஆண்டுதான் அனுமதி பெற்றது.  தமிழகத்தின் மதுபானத் தேவையில் 15 சதவீதத்தை நிறைவேற்றும் இந்த நிறுவனம் கேரளா, கோவா, மேற்கு வங்கம், ஒடிசா, புதுச்சேரி மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உயர் ரக மதுபானங்களை தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறது.

மதுபான தயாரிப்பு மட்டுமன்றி, லாட்டரி, சினிமா என பல தொழில்களையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஸ்பான்சராகவும் உள்ளது. அரசுக்கு மதுபானம் விநியோகிக்கும் ஒப்பந்ததாரராக உள்ளது. இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களில் இந்த நிறுவனம் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் 150-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  சென்னை தியாகராயர் நகர் சி.ஐ.டி. காலனியில் உள்ள எஸ்.என்.ஜே நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.  கடந்த 3 ஆண்டுகளாக வரி ஏய்ப்பு  தொடர்பான தகவலின் பேரில் சோதனை  நடைபெறுவதாகவும், இது 2 நாட்கள் நீடிக்கும் என்றும் அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.  வரி ஏய்ப்பு விவகாரத்தில் அரசியல்  கட்சியின் தலைவர் களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே தொடர்பு உள்ளதா என்று விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.