tamilnadu

வடபழனியில் 2 மெட்ரோ நிலையங்களை இணைக்கும் ஸ்கைவாக் வடிவமைப்பு அறிமுகம்

வடபழனியில் 2 மெட்ரோ நிலையங்களை  இணைக்கும் ஸ்கைவாக் வடிவமைப்பு அறிமுகம்

சென்னை, மே19- சென்னை  வடபழனியில் இரண்டு மெட்ரோ ரயில்நிலையங்களை இணைக்கும் வகையில் ஆகாய நடைபாலம்  (ஸ்கை வாக்) அமைக்கப்படவுள்ளது. இதற்கான வடிவமைப்வை சென்னை மெட்ரோ   ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு பூந்தமல்லியில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் பயணிகள் வடபழனி ரயில் நிலையத்தில் இறங்கி ஆலந்தூரில் இருந்து சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஏறவேண்டும்.  அதற்கான பூந்தமல்லியில்இருந்து கலங்கரைவிளக்கம் வரை அமைக்கப்படும் வழிதடத்தில் வடபழனி ரயில் நிலையத்தில் ஏற்கெனவே உள்ள ரயில் நிலையம் அருகே மற்றொரு ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.  இந்த ரயில் நிலையத்தில் இருந்து  விரைவாக சென்ட்ரல் செல்லும் ரயிலில் ஏற ஸ்கை வாக் உதவும். ரூ.63,246 கோடி மதிப்பிலான இரண்டாம் கட்டத் திட்டத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் சென்னை மெட்ரோ ரயில், முதலில் இந்த ஆண்டு இறுதியில் பூந்தமல்லி - போரூர் பாதையையும், அடுத்த ஆண்டு போரூர் - வடபழனி - கோடம்பாக்கம் பாதையையும் தொடங்க உள்ளது. பயணிகளுக்கு, வடபழனி 54 கிமீ கட்டம் I மற்றும் 118.9 கிமீ கட்டம் II நெட்வொர்க்குகளை இணைப்பதால் முக்கிய நிலையங்களில் ஒன்றாகும்.  இந்த இரண்டு ரயில் பாதை களுக்கு இடையிலான போக்கு வரத்தை தடையின்றி மாற்றுவதற்கான முதல் படியாக, சென்னை மெட்ரோ ரயில் இரண்டு நிலையங்களையும் இணைக்கும் ஒரு ஸ்கைவாக்கை அமைக்கும் முயற்சியில் இறங்கி யுள்ளது. இந்த ஸ்கைவாக், பயணி களை முதல் கட்ட டிக்கெட் நிலை யிலிருந்து இரண்டாம் கட்ட டிக்கெட் நிலை வரை நேரடியாக அழைத்துச் செல்லும் வகையில் கட்டப்படும். இந்த வசதி பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் விரை வாக செல்லவும் உதவும் என்று பய ணிகள் தெரிவித்தனர். எங்கெங் கெங்கெல்லாம் முதல் கட்டம் இரண்டாம் கட்டம் ரயில் நிலை யங்கள் இணைக்கப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த வசதியை செய்து தரவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.   இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன  அதிகாரிகளின் கூறுகை யில்,  ஸ்கைவாக் அமைக்க ஒப்பந்த புள்ளி கோரியுள்ளோம். ஒப்பந்த தாரரை அடையாளம் காண மூன்று மாதங்களும், வசதியை உருவாக்க இன்னும் 6 மாதங்களும் ஆக லாம். கட்டுமான செலவு கிட்டத்தட்ட ரூ.10 கோடி என்றும் இது திட்ட செல விற்குள் அடங்கும் என்றும் கூறினர். “ஸ்கைவாக்கின் நீளம் கிட்டத்தட்ட 130 மீட்டர், அகலம் 6 மீட்டர். இது ஒரு மூடப்பட்ட நடைபாலமாக  இருக்கும். பூந்தமல்லி - கோடம்பாக்கம் இடையே நிலையங்களை கட்டும் பணிகள் நீண்ட காலமாக நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு வடபழனி நிலையத்தை நாங்கள் திறக்க வேண்டியிருப்பதால், பொது மக்களுக்கு ஸ்கைவாக் அமைக்கும் பணிகளை அதற்குள் முடிக்க திட்ட மிட்டுள்ளோம், ”என்றும் அவர்கள் தெரிவித்தனர்.