tamilnadu

img

மாணவி சஹானாவின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட சிவகார்த்திகேயன்

ஏழை மாணவி சஹானாவின் கல்விச் செலவை முழுமையாக ஏற்ற சிவகார்த்திகேயன்.

சமீபத்தில் பிளஸ் 2 தேர்வு வெளியானது. இந்த தேர்வை எழுதிய தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த சஹானா என்ற மாணவி 600க்கு 524 மதிப்பெண் பெற்றுள்ளார். கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றான இந்த பகுதியில், மின்விளக்கு கூட இல்லாத ஒரு குடிசையில் படித்து இந்த மதிப்பெண்ணை பெற்றுள்ளார்.

இதனை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானா மருத்துவம் உள்ளிட்ட எந்த படிப்பு படிக்க விருப்பப்பட்டாலும், அந்த படிப்புக்குரிய அத்தனை செலவையும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார்.


;