tamilnadu

img

விசிக சட்டப்பேரவை குழுத் தலைவராக சிந்தனைச்செல்வன்... .

சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சட்டப்பேரவை குழுத் தலைவராக  சிந்தனைச் செல்வன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த 4  பேரும் சட்டப்பேரவைக்கு முதன்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.சட்டப்பேரவை குழுத் தலைவராக காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ., சிந்தனை செல்வன் தேர்வு செய்யப் பட்டார்.துணைத் தலைவர்களாக நாகப் பட்டினம் எம்.எல்.ஏ., ஜெ.முகமது ஷாநவாஸ், செய்யூர் எம்.எல்.ஏ., மு.பாபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.கட்சியின் கொறடாவாக திருப்போரூர் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி தேர்வு செய்யப்பட்டார்.பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக மூத்த தலைவர் ஜி.கே.மணி தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.பாஜக சட்டமன்ற குழு தலைவராக நயினார் நாகேந்திரன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

;