tamilnadu

மூத்த எழுத்தாளர் கு.சின்னப்பபாரதி மறைவுக்கு இரா.முத்தரசன் இரங்கல்

சென்னை, ஜூன் 14- மூத்த எழுத்தாளர் கு.சின்னப்ப பாரதி மறைவுக்கு இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் இரங்கல் தெரிவித்து ள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலக்கிய உலகின் முன்னணி படைப் பாளி கு.சின்னப்பபாரதி (88) கால மானார் என்ற துயரச் செய்தி கேட்டு வேதனையுற்றோம். நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் விவசாயக் குடும் பத்தில் பிறந்த சின்னப்பாரதி சமூக சீர்திருத்தங்களில் முனைப்புக் காட்டி யவர். பகுத்தறிவு சார்ந்த அறிவியல் கருத்துக்களை முன்னெடுத்து வந்தவர். மாணவப் பருவத்தில் இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, அதன் வழிநின்று இறுதி வரை பயணித்தவர். இலக்கிய படைப்புகளில் கு.சின்னப் பபாரதியின் “தாகம்”, “சர்க்கரை”, “பவளாயி” ஆகிய நாவல்கள் பல மொழி களில் பயணித்து, பரவலான வாசிப்பு வட்டத்தை பெற்றுள்ளன. “சுரங்கம்” நாவல் சுரங்கத் தொழிலாளர்களின் சமூக வாழ்வை துல்லியமாக பிரதி பலித்துள்ளது. முதுமையை எட்டிய நிலையில் கு.சின்னப்பபாரதி “இலக்கிய கருத்தரங்கு நினைவு அறக்கட் டளை” அமைத்து புதிய படைப்பாளி களை ஊக்கப்படுத்தி வந்தவர். இவரது இலக்கியப் பணி பல விருதுகளை வென்று, பாராட்டுதல்களை பெற்றுள் ளது. சமூகத்தை உள்வாங்கி, பிரதி பலித்து அதன் எதிர்கால பயணத்திற்கு சரியான திசைவழி காட்டும் படைப்பாளி யை இலக்கிய உலகம் இழந்துவிட்டது.

அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தின ருக்கும், இலக்கிய நண்பர்களுக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கி றோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முற்போக்குப் பேரவை இரங்கல் மிகச்சிறந்த முற்போக்குச் சிந்தனை யாளரும், எழுத்தாளரும், நாவலாசிரி யருமான கு.சின்னப்ப பாரதி இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி யை அளிக்கிறது. தனது எழுத்துக்களின் மூலம் முற்போக்குக் கருத்துக்களை தமிழக மக்களின் உள்ளங்களில் விதை த்தவர். அவரது மறைவு தமிழக மக்களுக் கும், முற்போக்கு இலக்கிய உலகிற்கும் மிகப்பெரிய இழப்பாகும். அவருக்கு அனைத்திந்திய முற்போக்குப் பேரவை யின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரி வித்துக் கொள்கிறோம் என பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள் ளார்.

டி.யூ.ஜெ.இரங்கல்
தமிழகத்தின் தலை சிறந்த முற்போக்கு, இலக்கியவாதியும், எழுத்தாளரும், பத்திரிகையாளருமான தோழர் கு.சின்னப்ப பாரதி (88) மறை விற்கு டி.யூ.ஜெ. சார்பில் ஆழ்ந்த  இரங்கலையும், செவ்வணக்கத்தை யும் தெரிவித்துக் கொள்கிறோம் என  மாநிலத் தலைவர் பி.எஸ்.டி.புரு ஷோத்தமன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.

;