சென்னை,மார்ச் 16- நகரப்புறங்களில் வேலை வாய்ப்புக்காக வெளியூர்களில் இருந்து வருவோர் தனிவீடு வாங்குவதற்கு பதில் இரண்டு மூன்று பேர் சேர்ந்து ஒரு வீட்டை வாங்கி அல்லது வாடகைக்கு எடுத்து வாழும் முறை கோ லிவிங் என்ற அழைக்கப்படுகிறது. கட்டி முடிக்கப்பட்டு விற்பனையாக வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளை தற்காலிகமாக வாடகைக்கு விடுவதன் வாயிலாக கட்டுமான நிறுவனங்கள் கடன் சுமையை ஒரளவு தவிர்க்கமுடியும். உரிமையாளர்களும் தங்களது வீட்டிற்கு வாடகை தாரர் வந்தால் வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தமுடியும். இதற்கான வாய்ப்பை சர்வதேச அளவில் தற்போது புகழ்பெற்றுவரும் ஸூலோ வழங்குகிறது. சென்னையில் கோ லிவிங் குறித்து நடைபெற்ற கருத்தரங்கில் ஒலிம்பியா குழுமத்தின் மேலாண் இயக்குநர் அஜித் சோர்டியா, டிஆர்ஏ குழுமத்தின் இயக்குநர் ரஞ்ஜித் ரத்தோட்,ரமணியம் கட்டுமான நிறுவனத்தின் நிர்வாகி ஜெகநாதன், தோஷி ஹவுசிங் இயக்குநர் மெஹூல் தோஷி உள்பட பலர் பேசினர். இதில் கட்டுமான நிறுவனங்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கட்டிட உரிமையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.