tamilnadu

img

சாத்தான்குளம் சம்பவம்: முதலமைச்சரே பொய் பேசலாமா? - கி.வீரமணி கேள்வி

சென்னை, ஜூலை 1- சாத்தான்குளம் போன்ற சம்வபவங்களில் முதல்வரும் அமைச்சர்களும் யாரையும் பாது காக்கக்கூடிய வகையில் பேசுவது,  அப்பதவியின் மாண்பை ஒரு போதும் காப்பாற்றுவது ஆகாது என, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, அவர் புத னன்று    (ஜூலை 1) வெளியிட்டுள்ள  அறிக்கை: "தூத்துக்குடி மாவட்டம் சாத் தான்குளத்தில் இரண்டு வணிகப் பிரமுகர்கள் ஜெயராஜ் (வயது 58),  அவரது மகன் பென்னிக்ஸ் (வயது  31) ஆகியோரை காவல் நிலை யத்தில் வைத்து கடுமையாகத் தாக்கி, மிருகத்தனமாக நடந்து கொண்டனர். சித்திரவதைக்குப் பின்னர் விசாரணைக் கைதி களாக இருந்த நிலையில், அவர்  கள் உயிரிழந்த சம்பவம் அப்பட்ட மான சித்திரவதையினால் ஏற்பட்ட அநியாயப் படுகொலையாகும். தமிழ்நாட்டுக் காவல் துறைக்கும், அத்துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கும் ஏற்பட்டுள்ள களங்கம் வரலாற்றில் எளிதில் அழிக்கப்பட முடியாத ஒன்றாகும்.

  காவல்துறை அதிகாரிகள் குற்றம்புரிந்து, அதைச் சாமர்த்திய மாக மறைக்க அனைத்து முயற்சி களையும் கையாண்டதோடு, விசா ரணைக்கு வந்த மாஜிஸ்தி ரேட்டுக்கு ஒத்துழைப்பு அளிக்க வில்லை. அதோடு, அவரைக் கொச்  சையாகப் பேசி, கேட்ட தடயங்க ளைத் தரவும் மறுத்து, அதீதமாக  நடந்துகொண்டது எந்த தைரியத்  தில், யார் தைரியத்தில்? என்பதே  நாட்டு மக்களின் கேள்வி! காவல்துறையைத் தனது கையில் வைத்திருக்கும் முதல் வர், 'உடல்நலக் குறைவால் அவ் விருவரும் இறந்துவிட்டார்கள்' என்று கூறியது எவ்வகையில் நியாயம்? அதேபோல், அம்மாவட்ட அமைச்சர் ஒருவர், 'காவல் நிலையத்தில், லாக் அப்  மரணமல்ல அவை' என்ற ஒரு  விநோத வியாக்கியானம் தந்ததும்  யாரைப் பாதுகாக்க? கொலை வழக்குப் பதிவு செய்வதோடு நிறுத்திவிடாமல், குற்றவாளிகளான அக்காவல் துறை அதிகாரிகள் மீதும், தயவு  தாட்சண்யம் காட்டாமல் உடனடி யாக தமிழக அரசு மேல் நடவ டிக்கை எடுக்கத் தாமதமின்றி முன்  வர வேண்டும். அப்போதுதான் காவல்துறையின் மீதும், ஆட்சி யின்மீதும் நம்பிக்கை ஏற்படும். இவ்வாறு கி.வீரமணி தெரி வித்துள்ளார்.

;