tamilnadu

img

சசிகலா நலமாக இருக்கிறார்: டிடிவி.தினகரன்....

சென்னை:
சசிகலா நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார் என அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

நான்கு ஆண்டு கால தண்டனை முடிந்து வரும் 27 ஆம் தேதி, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையிலிருந்து சசிகலா விடுதலையாகவுள்ள நிலையில், புதனன்று(ஜன.20) திடீரென காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட காரணங்களுக்காக அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஆக்சிஜன் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. கொரோனா சோதனை செய்யப்பட்டதில் அவருக்கு தொற்று பாதிப்பு இல்லை எனத் தெரியவந்தது.

சர்க்கரை நோய், தைராய்டு பிரச்சனைகளுடன் மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததால் சசிகலாவிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், அவசர பிரிவில் உள்ள அவர், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் தகவல் அளிக்கப்பட்டது.இதனையடுத்து, சசிகலாவின் உறவினர்களான விவேக், வெங்கடேஷ், ஜெய் ஆனந்த் உள்ளிட்டோர் மருத்துமனைக்கு சென்று அவரது உடல்நலம் குறித்து கேட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் தம்பி மகன் ஜெய் ஆனந்த், மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் எனக் கூறினார். சிகிச்சைக்கு சேர்ந்து இவ்வளவு நேரமாகியும் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை என வெங்கடேஷ் குற்றஞ்சாட்டினார்.

சிறிது நேரத்தில் மருத்துவமனைக்கு வந்த அமமுக பொதுச்செயலாளரும், சசிகலாவின் அக்காள் மகனுமான டிடிவி.தினகரன் மருத்துவர்களிடம் பேசிய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், “சசிகலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வகிறது. அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதால் ஸ்கேன் எடுக்கவேண்டிய அவசியமில்லை என்றும் மருத்துவர்கள் என்னிடம் கூறினர்.அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற வேண்டும் என ஆதங்கத்தில் உறவினர்கள் கூறுகின்றனர். அதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை” என்றார்.

;