tamilnadu

img

சந்தேகம் சாமிக்கண்ணு

இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் :- இந்தியர்களின் உரிமைகளில் தலையிட வெளிநாடுகளுக்கு அதிகாரமில்லை.
ச.சா - யாருகிட்ட பெட்ரோல், டீசல் வாங்குறதுன்னு மட்டும் அமெரிக்கா முடிவு பண்ணலாமா..??
_ _ _

செய்தி :- மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
ச.சா - லட்சக்கணக்கான ஊழியர்கள வீட்டுக்கு அனுப்புற திட்டமா..??
_ _ _

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் :- ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடை.
ச.சா - உலகம் முழுக்க தடை விதிச்சட்டு யார் கூட வியாபாரம் பண்ணுவீங்க..??
_ _ _

செய்தி :- மத்திய அரசின் மதிப்பீட்டை விட பற்றாக்குறை அதிகமாக இருக்கும்.
ச.சா - இது பத்திலாம் கவலைப்படுற மாதிரியா அரசு இருக்கு..??