கொரோனா நோய் தொற்று காலத்தில் நுண் நிதி நிறுவனங்கள் மாதத் தவணையை கட்டாயப்படுத்தி வசூலிப்பதைக் கண்டித்தும், ஜனவரி மாதம் வரை தவணை வசூலிப்பதை நிறுத்தி வைக்கக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் வட்டத் தலைவர்கள் கே.பாஸ்கர், யூ.அம்பிகா தலைமையில் சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் வே.ஏழுமலை, மாதர் சங்கத்தின் வட்டச் செயலாளர் ஏ.மீனா, நிர்வாகிகள் வெங்கடேசன், மகாலட்சுமி, பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதன் பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.