2021 ஆம் ஆண்டின் சாகித்ய அகாடமி யுவ புரஸ்கார் விருதை எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் சாகித்ய அகாடமியின் “யுவபுரஸ்கார்” விருது 2021 ஆம் ஆண்டிற்காக எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்ரமணியன் எழுதிய “நட்சத்திரவாசிகள்” நாவலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுக்கான பதக்கமும், ரூ.50,000 பரிசுத் தொகையும் சாகித்ய அகாடமி சார்பில் வழங்கப்படும்.
ராஜபாளையத்தைச் சேர்ந்த கார்த்திக் பாலசுப்ரமணியன், சென்னையில் மென்பொறியியல் துறையில் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய முதல் நாவல் “நட்சத்திரவாசிகள்” ஆகும். இதற்குமுன் “டொரினோ” என்கிற சிறுகதை மற்றும் “ஒளிரும் பச்சை கண்கள்” என்கிற சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டு உள்ளார். அதனைதொடர்ந்து ஐடி துறையைச் சார்ந்து இவர் எழுதிய “நட்சத்திரவாசிகள்” என்ற நாவலுக்கு யுவ புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது.