திருவண்ணாமலை, மார்ச் 13- ‘நிலம் பூத்து மலர்ந்த’ நாவலுக்காக சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாதமி விருது பெற்ற கே.வி. ஜெயஸ்ரீக்கு, தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடை பெற்றது. திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் பாலாஜி தலைமை தாங்கி னார். கிளைச் செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார். கவுரவத் தலைவர் ச.தமிழச் செல்வன், மாநில துணைப் பொதுச் செயலாளர் எஸ்.கருணா, ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணைப் பொதுச் செய லாளர் உதயசங்கர், மாவட்டத் தலைவர் ஆரிசன், கிளைத் தலைவர் கிருஷ்ண மூர்த்தி, முன்னாள் நிர்வாகி கள் குழந்தைவேலு, சந்துரு, பேராசிரியர்கள் பிரேம் குமார், லஷ்மி, செய்தி தொகுப்பாளர் உமா மோகன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சிவப்பு யானை குழு ஆசிரியர் சந்திரமோக னின் ‘பெரும்பாணர் கூட்டம்’ என்ற நாடகம் நடத்தப் பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தின் தமுஎகச நிர்வாகிகள், கலைஞர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். முன்னதாக வைகரை குழுவினரின் மக்கள் இசை பாடல்கள் இசைக்கப்பட்டது.