tamilnadu

ரூ. 7 லட்சம் மோசடி: புகாரை கண்டுகொள்ளாத காவல்துறை

திருவண்ணாமலை பிப்.7- திருவண்ணாமலை அரசு செவிலியரிடம் ரூ. 7 லட்சம் மோசடி செய்த ரியல் எஸ்டேட்  புரோக்கர் மீது காவல்துறையினர் உடனடி யாக நடவடிக்கை எடுக்குமாறு புகார்தாரர் கோரிக்கை. திருவண்ணாமலை வேங்கிக்கால், பூமா ரியம்மன் நகரில் வசித்து வரும் நீலாவதி. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்தில் பழனி என்ப வர் மீது புகார் அளித்தார். அந்த புகாரில் திரு வண்ணாமலை தென்றல் நகரைச் சேர்ந்த சாந்தி என்பவர் தன்னுடன் பணி செய்து வருவ தாகவும், அவருடைய கணவர் பழனி என்பவர்  தான் கார் வாங்க இருப்பதாகவும், அதற்கு கேரண்ட்டராக கையெழுத்து இடும்படியாக என்னிடம் கேட்டுக் கொண்டார்.

 அதன்பேரில் திருவண்ணாமலை ஆட்சி யர் பாரத ஸ்டேட் வங்கிக்கு என்னை அழைத்  துச் சென்று என்னிடமிருந்து ஒன்பது நிரப்பப்  படாத காசோலைகளை பெற்று வங்கியில் சமர்பித்து என் பெயரில் ரூ. 7 லட்சம் கடன்  பெற்று கார் வாங்கினார். அந்த வாகனத்தின்  பதிவை அவர் பெயரில் பதிவு செய்து கொண்டார்.  இது தெரிந்து நான் வங்கிக்குச் சென்று  வங்கியின் கிளை மேலாளர் கலைவாணி யிடம் கேட்டபோது பழனி என்பவர் உங்களை  தன் மனைவி என்று கூறியதால் அவர் பெயரில் வாகனம் பதிவு செய்ய அனுமதித்த தாகக் கூறினார். இதை கேட்டு அதிர்ச்சிய டைந்த நான் கிளை மேலாளரிடம் வாகனத்தின்  பதிவு எனது பெயருக்கு மாற்றம் செய்யு மாறும் இல்லையென்றால் கடன் தொகை யினை பழனி பெயருக்கு மாற்றி விடுமாறு கூறி னேன். பழனிஅவரது மனைவி சாந்தியிடம் கேட்டதற்கு என்னையும் எனது குடும்பத்தை யும் மிரட்டினார். ஆகவே அவர்கள் மீது நடவ டிக்கை எடுக்குமாறு அம்மனுவில் குறிப்பிட்டி ருந்தார்.  இதனைத்தொடர்ந்து, அம்மனு மீது காவல்துறையினர் ஏழு மாத காலமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தான்  மிகுந்த மன உளைச்சலுக்குள்ளாகி உள்ள தாகவும் உடனடியாக அம்மனு மீது நடவ டிக்கை எடுத்து தன்னை ஏமாற்றிய ரியல் எஸ்டேட் புரோக்கர் பழனி மற்றும் அவரது மனைவி சாந்தி வங்கி கிளை மேலாளர் கலைவாணி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு துணை கண்காணிப்பாள ரிடம் கோரிக்கை வைத்தார்.