கடந்த வாரம் தனக்கு ரூ. 500 கோடி தருவதாக கூறி கூட்டணிக்கு அழைத்தார்கள் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருந்தார். அதுவே இந்த வாரம்... 15 சீட், 2026-இல் நீங்கள்தான் முதலமைச்சர், 1,000 கோடி ரூபாய் பணம்.. குடும்பத்துக்குத் தனியாகப் பணம், கட்சிக்கு தனியாக நிதி தருகிறோம் என்று சொல்லி கூட்டணிக்கு கூப்பிட்டார்கள்” என்று ரூ. 500 கோடியை ஒரே வாரத்தில் ரூ. 1000 கோடியாக்கி உள்ளார்.