tamilnadu

img

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.30 லட்சம் மோசடி: விவசாயிகள் மறியல்

சங்கராபுரம். ஜூலை 3- விவசாயிகள் விற்பனை செய்த  நெல்லுக்கு  30 லட்ச ரூபாய் பணம் வழங்காமல்  தலைமறைவான நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக் கோரி சங்கராபுரம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் முன்பு விவசாயி கள்  மறியலில் ஈடுபட்டனர். சங்கராபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன், ராஜா ஆகியோர் அங்குள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விவசாயிகளின் விளை பொருட்களை வாங்கி விற்கும் தரகு  பணியில் ஈடுபட்டிருந்தனர். கடந்த மே மாதம்  11ஆம் தேதி 30 லட்ச ரூபாய் மதிப்பிலான நெல் மூட்டைகளை விவசாயிகளிடமிருந்து  ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் இவர்  கள் வாங்கியுள்ளனர். ஆனால் இதற்கான பணத்தை வழங்காமல் விவசாயிகளை இழுத்தடித்து வந்துள்ளனர். இதுவரை விவ சாயிகள் 3 முறை போராட்டம் நடத்தியுள்ள னர்.  சங்கராபுரம் காவல் நிலையத்திலும் புகார்  அளித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் வெள்ளியன்று (ஜூலை 3) ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை,  செயற்குழு உறுப்பினர் எம்.ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் டி.வெங்கடேசன், வட்டச் செயலாளர் வை.பழனி, வாலிபர் சங்க வட்டச் செயலாளர் பாஸ்கர் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் திருக்கோவிலூர் காவல் துணை  கண்காணிப்பாளரை டி.ஏழுமலை கைபேசி யில் தொடர்பு கொண்டு பேசினார். உடனடி யாக மேல் நடவடிக்கை எடுத்து விவசாயி களுக்கு பணத்தை பெற்றுத்தர உரிய ஏற்பாடு கள் செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து  மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்  பட்டது.  பின்னர் இந்த பிரச்சனையில் தலை யிடுமாறு  சங்கராபுரம் வட்டாட்சியரிடம் மனு  அளிக்கப்பட்டது.