மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு
கோவை, அக்.5- கோவையில் திடீரென பெய்த மழையால், சாலைக ளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் அவ தியடைந்தனர். கோவை மாநகரின் காந்திபுரம், 100 அடி சாலை, சிவானந்தா காலனி, சாய்பாபா காலனி, கவுண்டம் பாளையம் மற்றும் புறநகர் பகுதிகளான வடவள்ளி, தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஞாயிறன்று பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக் குள்ளாகினர். குறிப்பாக, கவுண்டம்பாளையம் பகுதி யில் மழைநீர் வெள்ளமாக ஓடியதால், சாலைகளில் வாகனங்கள் செல்வதற்கு சிரமம் ஏற்பட்டது. காலை முதல் கடும் வெயிலால் அனல் காற்று வீசிய நிலை யில், மாலையில் பெய்த கனமழை காரணமாக வானிலை குளிர்ச்சியாக மாறியுள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தாலும், வெள்ளப்பெருக்கு மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலரும் பாதிக்கப் பட்டனர். மேலும், மழைநீர் வடிகால் அமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
