tamilnadu

img

சாலை விபத்தில் பலியானவர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு

திருக்கோவிலூர். அக். 18- திருக்கோவிலூரை அடுத்த கடம்பூரில் கடந்த ஞாயிற்றுக்  கிழமை கேஸ் சிலிண்டர் லாரியும், மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதால் நெஞ்சை உலுக்கும் சாலை விபத்தில் லாலாபேட்டை என்ற  ஒரே ஊரைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ  இடத்திலேயே  பலியாகினர். 11 மாணவர்கள் மருத்துவமனை களில் சிகிச்சை பெற்று வந்தனர். பள்ளிச் சிறார்கள் மூன்று பேர் இறந்த கொடூர விபத்தால் அப்பகுதி கிராமப்புற மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்திருந்திருந்தனர் இவ்விபத்தில் படுகாயமுற்று மிகவும்  ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 4 நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்டு  வந்த மாணவி சந்தியா(14)  சிகிச்சை பல னின்றி  இறந்தார். இவ்விபத்தில் பாதிக்கப்  பட்டுள்ள இதர மாணவர்கள் தீவிர  சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். சிலரது நிலை கவலைக்கிட மாக உள்ளது. அனைத்து மாணவர்களும் ஏழை, எளிய குடும்பங்க ளைச் சேர்ந்தவர்கள் என்பதால் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் இறந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும் மேலும் காயம் அடைந்து  சிகிச்சை பெற்று வரும் மாணவர்களுக்கு தரமான சிகிச்சை யும், அரசு உதவியும் கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென இக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரியுள்ளனர்.