tamilnadu

img

ஆர்.கே. நகர் தொகுதியில் சாலைக்காக போரடியவர்கள் கைது

சென்னை, நவ.11 - சென்னை ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதிக்கு ட்பட்ட கொருக்குப்பேட்டை கண்ணகி நகர், கரு மாரியம்மன் நகரில் கடந்த பல ஆண்டுகளாக  சாலை போடாமல் உள்ளதை கண்டித்து அப்பகுதி மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்தது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டை யில் மக்களின் அடிப்படைவசதி கள் கேள்விக் குறியாக உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்ட மன்ற தேர்தலில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அவர் மறைவிற்கு பிறகு நடை பெற்ற தேர்தலில் தினகரன் வெற்றி பெற்று இத்தொகுதி யின் சட்டமன்ற உறுப்பின ராக உள்ளார். இத் தொகுதி கடந்த சில ஆண்டுகளாக சுகாதார சீர்கேடு நிறைந்த பகுதியாக மாறிவருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் மழைநீர் வடிகால்வாய், சாக்கடைகலந்த குடிநீர், காற்றுமாசு, துர்நாற்றம், கொசுத்தொல்லை போன்ற வற்றால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்க ளில் பிரதானசாலைகள், தெருக்கள் எல்லாம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கி றது.  இதனால் தெருக்களில் சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம்  அப்பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் வழங்கியுள்ளனர். மேலும் கையெத்து இயக்கம், ஆர்ப்பாட்டம், என பல போராட்டங்கள் சிபிஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நடத்தியுள்ளன.

ஆனால் இது வரை எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொதுமக்கள் சுகாதார சீர்கேட்டை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட னர். அப்போது  காவல்துறை யினர் உடனே தலையிட்டு,‘ போராட்டம் நடத்த வேண்டாம், நாங்கள் உரிய அதிகாரிகளிடம் பேசி தரமானசாலை அமைக்க ஏற்பாடு செய்கிறோம்’ என்ற னர். இதை ஏற்று பொது மக்கள் போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.

ஆனால் எவ்வித நடவடிக்கை யும் எடுக்கப்படாமல் அப்படியே சாலைகள் இருப்பதாக சிபிஎம் பகுதிச்செயலாளர் ரவிக்குமார் கூறுகிறார். இந்நிலையில் சாலை வசதி செய்து தரும் வரை காத்திருப்போம் என வலியுறுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அப்பகுதி மக்கள் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில்  ஈடுபட்ட வர்களை வலுக்கட்டாயமாக இழுத்து கைது செய்தனர். இந்த போராட்டத்திற்கு சிபிஎம் கிளைச் செயலாளர் ஜி.ஜோதிபாசு தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன், ஏ.விஜி, கே.ஜானகி, எஸ்.மகேஷ்வரி, ஜி.சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட வர்களை மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.கே.சண்முகம் நேரில் சந்தித்தார். ‘ பொதுமக்களின் கோரி க்கைகள் நிறைவேற்றும் வரை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும்’ என்றார் கிளைச் செயலாளர் ஜோதிபாசு.

;